அமெரிக்காவின் மிக மிக மோசமான அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் விளாசல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இருவரும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பதும் அனல் பறக்கும் பிரச்சாரம் காரணமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மீறி தேர்தல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோபிடன், ‘நிறவெறி வெறுப்பு மற்றும் அவற்றின் அடிப்படையிலான பிரிவினையை ஏற்படுத்த முயன்ற ஒரே அதிபர்தான் டிரம்ப் தான் என்று ஜோ பிடன் விளாசியுள்ளார்

அது மட்டுமின்றி அமெரிக்கா இதுவரை சந்தித்ததில் மிக மோசமான அதிபர் டிரம்ப் தான் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் ஜோபிடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பில் தெரிவித்து வருகின்றன