2019-ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள். உங்களோடது லிஸ்ட்ல இருக்கானு பார்த்துக்கோங்க மக்களே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம்.
நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை. சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.
மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1. 123456
2. 123456789
3. qwerty
4. password
5. 1234567
6. 12345678
7. 12345
8. iloveyou
9. 111111
10. 123123
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout