கொரோனா நிலைமை மோசமாவதற்கு அரசியல் அமைப்புகளின் துரோகம்தான் காரணம்!!! நோம் சாம்ஸ்கி குற்றச்சாட்டு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் தத்துவவியல் நிபுணரும், மொழியியல் அறிஞருமான நோம் சாம்ஸ்கி இந்த உலகம் கொரோனாவை கையாண்ட விதம் தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும், அரசியல் அமைப்புகளின் துரோகத்தாலேயே இந்த நோய்த்தொற்று மோசமான சில்லகாக மாறியிருக்கிறது எனவும் குற்றம்சாட்டியிருக்கிறார். துரிதமான நடவடிக்கைகைய மேற்கொண்டிருந்தால் கொரோனா தொற்றை முன்பே தடுத்திருக்க முடியும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார்.
91 வயதான நோம்சாம்ஸ்கி தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றை குறித்து சீனா கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இது நிமோனியா காய்ச்சல் போல இருக்கிறது எனக் குறிப்பிட்டது. அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா நோய்த்தொற்றைக்கு றித்து ஆய்வுசெய்து சீன மருத்துவர்கள் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிக்கை தொடர்பாக சிங்கப்பூர், சீனா, ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது நாடுகளில் அதிக பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டது. ஆனால் மேற்கத்திய நாடுகள் இந்த நோய்ப்பரவலைப் பற்றி மிகவும் சாதாரணமாக நினைத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த நோய்த்தொற்றில் சிரத்தை இல்லாமல் செயல்பட்டது எனவும் அதிபர் ட்ரம்ப் நோய்த்தொற்று குறித்து ஆரம்பத்தில் வேடிக்கையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஜெர்மனியும் நோய்த்தொற்றிற்காகத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி உலக நாடுகள் விரைந்து செயலாற்றாத தன்மையே, தற்போது பெரிய அளவில் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவால் மனிதகுல வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத பேரழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த கொரோனா முடிவுக்கு வரும்போது உலகம் வேறொரு அச்சுறுத்தலையும் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்” எனவும் கூறியிருக்கிறார். சர்வாதிகாரம் மிக்க மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் ஒத்துப்போவதற்கான சாத்தியக்கூறுகளை கொரோனா ஆபத்துக் கொண்டுவந்து கொடுக்கும். இதைத்தவிர உலகம் அணுஆயுதப்போர், புவி வெப்பமயமாதல் போன்ற சிக்கலையும் சந்தித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் உலகம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார பேரடியைச் சந்திக்கும் எனச் எச்சரித்திருந்தது. அதைப்போல, ஐ.நா. சபையின் ஓர் அங்கமான சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் 200 கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கக்கூடும், இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் எனவும் எச்சரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout