உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடு!!!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

 

அரியவகை செம்மறி ஆடு ஒன்று இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை உலகில் இத்தனை அதிகமான விலைக்கு ஒரு ஆடு விற்பனை செய்யப்பட்டது இல்லை என்பதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஸ்காட்லாந்து டெக்ஸல் என்ற அரியவகை செம்மறி ஆடு ஒன்று இங்கிலாந்தில் 380,500 பவுண்டுக்கு விற்பனை செய்யபட்டு இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்லி போர்டன் என்ற விவசாயி ஒருவர் இந்த ஆட்டை விற்பனை செய்திருக்கிறார். இதற்குமுன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து டெக்ஸல் எனும் அரியவகை செம்மறி ஆடு 230,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த விலையை முறியடித்து தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. 3 விவசாயிகள் சேர்ந்து வாங்கியுள்ள இந்த அரியவகை செம்மறி ஆட்டை மேலும் இனப்பெருக்கம் செய்து வியாபாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெதர்லாந்தில் உள்ள ஒரு சிறிய தீவில் இந்த அரியவகை செம்மறி ஆடு உருவானதாகவும் தகவல் கூறப்படுகிறது. தற்போது மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் உலகின் அதிக விலை கொண்ட செம்மறி ஆடு இனமாக மாறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.