சோதனை கட்டங்களைத் தாண்டி உலகிலேயே முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவின் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதன் அனைத்துக் கட்டச் சோதனைகளிலும் வெற்றிப் பெற்றிருப்பதாக அதிபர் புடின் தெரிவித்து இருக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைத் தனது மகளுக்கும் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டு இருககிறார். ரஷ்யாவின் ஹேமாலயா இண்ஸ்டியூட் மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இரண்டும் இணைந்து கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் வீடியோ கான்பரஸ்சில் பேசிய அதிபர் புடின், “உலகில் முதல் முறையாக நாவல் கொரோனா வைரஸூக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்” என்று கூறியிருக்கிறார்.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் முறையாக அனைத்துக் கட்ட சோதனைகளையும் கடைபிடிக்குமாறு உலகச் சுகதார ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது அதிபர் புடின் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments