சோதனை கட்டங்களைத் தாண்டி உலகிலேயே முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி!!!

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

 

உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவின் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதன் அனைத்துக் கட்டச் சோதனைகளிலும் வெற்றிப் பெற்றிருப்பதாக அதிபர் புடின் தெரிவித்து இருக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைத் தனது மகளுக்கும் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டு இருககிறார். ரஷ்யாவின் ஹேமாலயா இண்ஸ்டியூட் மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இரண்டும் இணைந்து கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் வீடியோ கான்பரஸ்சில் பேசிய அதிபர் புடின், “உலகில் முதல் முறையாக நாவல் கொரோனா வைரஸூக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்” என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் முறையாக அனைத்துக் கட்ட சோதனைகளையும் கடைபிடிக்குமாறு உலகச் சுகதார ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது அதிபர் புடின் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்

மச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபரை மச்சினியின் காதலன் வெறித்தனமாக கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் உயரிழந்த உடல்களை நாய் திண்ணும் அவலம்!!! பகீர் தகவல்!!!

தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நடிகை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை சுஜா வருணி.

கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

குடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!!

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு உண்டு