சினிமாவில் 60 ஆயிரம் கோடி சொத்துகளை சம்பாதித்த இயக்குநர்? யாரென்று தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் சிலர் 500 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கிய தகவல்களை அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து அந்த சினிமாவிற்கே காரணகர்த்தவாக இருக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் அவ்வளவாக ஊடகங்களில் வெளியாவதில்லை. இந்நிலையில் உலகிலேயே யார் பணக்கார இயக்குநர் எனும் தகவல் ஒன்று ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாத ஹாலிவுட் சினிமாவில் பல இயக்குநர் மிகவும் திறமை பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் இயக்கும் திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றிகளை குவித்து வருவதைப் பார்த்திருப்போம்.
அந்த வகையில் டைட்டானிக்‘, ‘அவதார்‘ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்‘ படத்தை இயக்கிய பீட்டர் ஜாக்சன், ‘இன்செப்ஷன்‘ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், ‘புளோயிங் ஸ்டார் வார்ஸ்‘, ‘இண்டியானா ஜோன்ஸ்‘ போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜார்ஜ் லூகாஸ் போன்ற இயக்குநர்கள் உலக அளவில் மிகவும் வரவேற்கபட்ட திரைப்பட இயக்குநர்களாகவும் அதேநேரத்தில் அதிக வருமானத்தை ஈட்டிவரும் இயக்குநர்களாகவும் இருந்து வருகின்றனர்.
ஜார்ஜ் லூகாஸ்- 79 வயதான இவர் ‘மல்டிபிளக்ஸ்- புளோயிங் ஸ்டார் வார்ஸ்‘, ‘இண்டியானா ஜோன்ஸ்‘ என்று பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் வேற்றுலகில் வசித்துவரும் ஜந்துகள், லேசர் கத்தி, பறக்கும் தட்டுகள், அந்தரத்தில் பறக்கும் பைக்குகள் என்று இவர் திரைப்படங்களில் காட்சிப்படுத்திய விஷயங்களுக்காகவே கொண்டாடப்பட்டு வருகிறார்.
மேலும் தனது ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தை டிஸ்னிக்கு கடந்த 2012 இல் 4.1 பில்லியன் டாலக்கு விற்றார். இதையடுத்து வெறுமனே 6 திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜார்ஜ் லூகாஸின் சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறுப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் இது 60 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கோ- உலகின் பணக்கார இயக்குநர்கள் வரிசையில் இரண்டாவதாக இருப்பது இவர்தான். ‘ஜாஸ்‘, ‘ஜுராசிக் பார்க்‘, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்‘, ‘கேட்ச் மீ இஃப் யூ கேன்‘ என்று வரலாற்று சிறப்பு மிக்க பல திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். 76 வயதான இவருடைய சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலராக இருக்கிறது.
பீட்டர் ஜாக்சன்- இந்த வரிசையில் மூன்றாவதாக இருக்கும் பீட்டர் ஜாக்சன் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்‘, ‘ஹாபிட்‘ போன்ற திரைப்படங்களை இயக்கி திறமையான இயக்குநர் எனும் பட்டியலில் இணைந்துள்ளார். 61 வயதான இவருடைய சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.
ஜேம்ஸ் கேமரூன்- ஹாலிவுட் சினிமாவில் கதைக்களத்திற்காகவே கொண்டாடப்படும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். கனடாவை சேர்ந்த இவர் 68 வயதான நிலையில் ‘டைட்டானிக்‘, ‘அவதார்‘, ‘டெர்மினேட்டர்‘ என்று வியக்க வைக்கும் பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். பல இளம் தலைமுறைக்கு குருவாக இருந்துவரும் இவருடைய சொத்து மதிப்பு 800 மில்லியன் டாலராக இருக்கிறது.
கிறிஸ்டோபர் நோலன்- சினிமா ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவருடைய இயக்கம், கதையமைப்பிற்கே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் ‘இன்செப்ஷன்‘, ‘இன்டர்ஸ்டெல்லார்‘ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவருடைய ‘ஓப்பன் ஹைமர்‘ விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 52 வயதான இவருடைய சொத்து மதிப்பு 250 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout