3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்!!!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது அபார நினைவாற்றல் திறன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அச்சிறுமிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பிரதீபா-இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தார். இதுதொடர்பாக வீடியோவும் சமூகவலைத் தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த வீடியோவிற்கு நம் நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வந்த நிலையில் கின்னஸ் சாதனை அமைப்பினரும் இந்த வீடியோவை பார்த்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் குழந்தையின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட கின்னஸ் சாதனை அமைப்பு குழந்தையின் நினைவாற்றலை பரிசோதிக்க விரும்பினர். அதைத் தொடர்ந்து குழந்தை ப்ரிவ்யாவின் நினைவாற்றலை சோதித்த கின்னஸ் சாதனை அமைப்பு தற்போது அவருக்கு உலகச் சாதனையை நிகழ்த்தியதற்கான பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்து உள்ளனர். சோதனையின்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை கூறி சிறுமி இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகவும் அந்த அமைப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments