எதிர்கட்சிகளை பார்த்து கமல் சொன்ன அந்த வார்த்தை......! பதறிப்போன இருபெரும் கட்சி தலைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கமலின் கட்சி உருவெடுத்துள்ளதை தொடர்ந்து, இத்தேர்தலில் மநீம பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ,அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்துமுனை போட்டி தேர்தலில் நிலவி வரும் நிலையில், தேர்தல் திருவிழா கலைகட்டியுள்ளது என சொல்லலாம். ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் சற்றே வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக களமிறங்க உள்ளார்.இந்நிலையில் நேற்று தொங்கு சட்டசபை குறித்து கமல் பேசியவை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரச்சாரங்களில் அதிமுக, திமுக குறித்து கமல்ஹாசன் காரசாரமாக விமர்சித்து வருகிறார். அதிலும் நேற்று சேலத்தில் மக்கள் முன் பிரச்சாரம் செய்த கமல் தமிழகத்தில் தண்ணீர் மற்றும் சட்டம், ஒழுங்கு லஞ்சம் இல்லாமல் இலவசமாக கிடைக்க வேண்டும். "குடிக்க தண்ணீர் கேட்பவனிடம், வாஷிங் மிஷின் தருவேன் என்கிறார்கள்" குடிக்கவே தண்ணீர் கிடைக்காதவன், இதை வைத்து என்ன செய்வான்.
'தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி என்று எம்ஜிஆர் கண்ட கனவு இன்னும் பலிக்கவில்லை'.
"நம் மாநிலத்தை ஆளும் கட்சி விஷப்பாம்பு போலத்தான்,பாம்பின் தலை துண்டித்தாலும், வால் ஆடிக்கொண்டிருக்கிறது. மற்றுமொரு கட்சியில் ஆபத்தான தலை ஆடிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் கஜானாவை சுரண்டியவர்களை குறித்து கணக்கு எடுக்க வேண்டும். முக்கியமாக தொங்கு சட்ட சபை அமைந்ததால், மீண்டும் தேர்தல் நடத்த அழுத்தம் கொடுப்பேனே தவிர, இரண்டு தீய சக்திகளுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தை மாற்று கட்சியாக உருவாக்கி வரும் கமல், "66 வயதாகிவிட்டது, இம்முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள்" சினிமாவை போலவே அரசியலில் சாதிப்பேன்" என்றும் பிரச்சாரத்தில் அண்மையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout