எல்லோரும் செளகிதாரை எடுத்துவிடுங்கள்: பிரதமர் மோடி கோரிக்கை

பிரதமர் மோடி உள்பட பாஜக பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலைத்தள கணக்குகளில் தங்கள் பெயருக்கு முன்னர் செளகிதர் என்ற வார்த்தையை சேர்த்து கொண்டனர் என்பது தெரிந்ததே. செளகிதர் என்றால் காவலர் என்று பொருள் தரும் வகையில் மக்களை காப்பவர் என்றே பாஜகவினர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மீண்டும் பாஜக ஆட்சி அமைவதை முடிவுகள் உறுதி செய்துள்ள நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் கணக்கில் உள்ள செளகிதர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இப்போது நமது பெயருக்கு முன்னே உள்ள செளகிதாரை எடுத்துவிட்டு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு கணமும் இதே உத்வேகத்துடன் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.

செளகிதார் என்ற வார்த்தையை எனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டேன். இருப்பினும் அந்த வார்த்தை என்னுள் ஒன்றாக எப்போதுமே இருக்கும். அதேபோல் அனைவரும் எடுத்துவிட வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.