விவகாரத்து கேட்டு வந்த பெண்...! பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டும் வக்கீல்....!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]



விவாகரத்து கேட்டுவந்த அப்பாவி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டியுள்ளான் வழக்கறிஞர்.

திருவள்ளூருக்கு அருகில் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தனது கணவருடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து பெற வேண்டும் என்பதால், அதே பகுதியைச் சேர்ந்த டார்ஜன் (44) என்ற வழக்கறிஞரை நாடியுள்ளார். அந்தப்பெண் ஏழையாக இருப்பதால், இலவசமாக உனது வழக்கை நடத்திக்கொடுக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இதன்பின் வழக்கு குறித்து சில ஆவணங்கள் தேவை என்பதால், தனது வீட்டிற்கு அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். அங்கு சென்ற அப்பாவிப்பெண்ணுக்கு, குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துள்ளான். இதை அருந்திய அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார், மயக்கத்திலிருந்து தெளிந்தபோது தான், டார்ஜன் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதை உணர்ந்துள்ளார். அந்த சமயத்தில் பெண்ணின் உடைகளை நீக்கி, கேவல எண்ணம் கொண்ட வக்கீல் நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.



மானங்கெட்ட மனைவி:

தனக்கு நடந்த அநீதியை நினைத்து, அவனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்தப்பெண். இதுகுறித்து வெளியே கூறினால், ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று டார்ஜன் இளம்பெண்ணை மிரட்டியுள்ளான். இந்த போட்டோக்களை வெளியிடாமல் இருக்க 7 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பெண்ணை துன்புறுத்தியுள்ளான். இதனால் பயமடைந்த அவர் 3 லட்சம் ரூபாய் வரை பணத்தை திரட்டி தந்துள்ளார். இதற்குப்பின்னும் 4 லட்சம் கேட்டு, வக்கீல் அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். போலீசிடம் புகார் கொடுத்தாலும், உன்னுடைய ஒவ்வொரு போட்டோவும் சமூகவலைத்தளங்களில் பரவும் என மிரட்டியுள்ளான்.



இதனால் அந்த இளம்பெண் டார்ஜனின் மனைவியை அணுகியுள்ளார். இதற்குப்பிறகு தான் அவனின் மனைவியும், இதில் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேறு வழியே இல்லாமல், காவல் நிலையத்தை நாடியுள்ளார் அந்தப்பெண். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். ஏமாற்று வக்கீல் டார்ஜான் கொடைக்கானலில் பதுங்கி இருந்துள்ளான். இது போலீசுக்கு தெரியவர, தனிப்படை காவல்துறையினர் கொடைக்கானலில் அவனை கைது செய்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின் டார்ஜன் சிறையில் அடைக்கப்பட்டான்.