'தி வாரியர்' உண்மைக்கதையா? இயக்குனர் லிங்குசாமி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த கமர்சியல் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் லிங்குசாமி இந்தப் படம் ஒரு உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் சினிமாவுக்காக கமர்சியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
ராம் பொத்தினேனி நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது அவருக்கு ஒரு பெருமை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும் இது ஒரு வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது என்றும் இதுவரை சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான போலீஸ் கதை என்பதை உறுதியாக சொல்லலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்தப் படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா மற்றும் ஆதி ஆகிய நால்வர் பரிசீலனையில் இருந்ததாகவும் இறுதியில் ஆதி தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஹீரோவுக்கு இணையான கேரக்டர் என்பதால் ஆதி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதும் அதேபோல் வில்லன் கேரக்டர் வலுவாக இருந்த போதிலும் அதை ராம் பொத்தினேனி பெரிதுபடுத்தவில்லை என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த படத்தில் தன்னுடைய அதிகபட்ச உழைப்பை கொட்டி இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த படம் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout