நடுரோட்டில் கூட தூங்கி விழும் மர்மநோய்… உலகைப் புரட்டிப் போட்ட விசித்திர சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,December 14 2020]

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஜகஜஸ்தான் நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பள்ளி, அலுவலகம் ஏன் நடுரோட்டிலும் கூட மயங்கி விழுந்து தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தூக்கம் இயல்பாக வரும் தூக்கத்தைப் போல இல்லாமல் மாதக்கணக்காக இருந்ததுதான் விஞ்ஞானிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கஜகஜஸ்தான் நாட்டின் கலாச்சி, கிராஸ்நோகோஸ் எனும் இரண்டு கிராமங்களிலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு விசித்திர நோய் பரவி இருக்கிறது. இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்கள் நடுரோடு என்று கூட பார்க்காமல் அப்படியே விழுந்து தூங்கி விடுவார்களாம். இந்தத் தூக்கம் 2 மாதம் கூட நீடித்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு முதலில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

கிராம மக்கள் அனைவரும் கடும் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதனால் தான் நடுரோட்டில் கூட தூங்கி வழிகின்றனர் என அப்போது வெளியான அனைத்துப் பத்திரிக்கைகளும் இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டன. இதில் கிராஸ்நோகோஸ் கிராமத்தில் வசித்து வந்த 6,500 மக்களில் கிட்டத்தட்ட 130 பேருக்கு இந்த மர்மநோய்த் தாக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. 600 போர்களைக் கொண்ட கலாச்சி பகுதியிலும் இந்த மர்ம நோய் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இவர்களுக்கு தாங்கள் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது கூட தெரியாத அளவிற்கு கடும் மனப்பிறழ்வையும் இந்நோய் ஏற்படுத்தி இருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்த இந்த மர்மநோயை என்செபனோபதி எனும் அறிவியல் குறியீட்டால் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2013 ஜுலை மாதம் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்த மர்மநோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. அப்பகுதியில் முன்னதாக சுரங்கங்கள் செயல்பட்டு வந்ததாகவும் அந்த சுரங்கத்தில் இருந்து வெளியான கனிம உலோகம் மற்றும் கதிர் வீச்சுகளினால் இத்தகைய நோய்த்தாக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. சுரங்கள் மூடப்பட்ட நிலையிலும் கதிர்வீச்சின் தாக்கம் மக்களின் உணவு மற்றும் ஆக்சிஜனில் கலந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பனின் அதிகரிப்பால் ஆக்சிஜனின் அளவு குறைந்து மாதக்கணக்கில் தூங்கும் விசித்திர நோய் கிராம மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் கடுமையான தீவிர சிகிச்சை மூலம் இந்த மர்ம நோய் சரிசெய்யப்பட்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது.

More News

ஏன் தைரியம் இல்லாம போறிங்க: ரியோவை உசுப்பேற்றும் அனிதா!

அர்ச்சனாவின் அன்பு குரூப்பை ஒரே ஒரு வாரம் கேப்டனாக இருந்த அனிதா, சுக்குநூறாய் உடைத்துவிட்டதாக நெட்டிசன்களின் பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில்,

2,000 அம்மா மினி கிளினிக் திட்டம்… அடுத்தடுத்த திட்டத்தால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளருடன் கூடிய 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்படும் என தமிழக முதல்வர்

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கொலை: மனைவியும் தற்கொலை!

தங்கை முறை உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்த பெண்ணும் தூக்கில் தொங்கி தற்கொலை

சபிக்கப்பட்ட கிராமம்… பிறந்த பெண்கள் அனைவரும் ஆண்களாக மாறும் விசித்திரம்!!!

விஞ்ஞானிகள் கூட உலக வரைப்படத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சபிக்கப்பட்ட கிராமமாகவே கருதுகின்றனர்.

கந்துவட்டி கொடுமை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக சட்டம் இருந்தும், கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலும் ஆங்காங்கே கந்து வட்டி கொடுமை நடந்து வருகிறது