40 வருட சினிமா பயணங்களில் இருந்து ஒரு சில பக்கங்களை பகிர்ந்த கோவை சரளா .
- IndiaGlitz, [Saturday,March 30 2024]
கரகாட்டக்காரன்,ஷாஜஹான் போன்ற திரைப்படங்களில் வசனங்கள் மூலமாக மக்களிடம் வரவேற்பை பெற்று முக்கிய துணை வேடங்களில் நடித்து இந்திய திரைப்பட நடிகை மற்றும் நகைச்சுவை நடிகையாக சுமார் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ,சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது போன்றவற்றை பெற்று இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நகைச்சுவை நடிகை கோவை சரளா அவர்களை பற்றி காண்போம்
தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரம்மாவிற்கு பிறகு நகைச்சுவையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் கோவை சரளா 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி கோவையில் பிறந்தார்.
சிறு வயதிலேயே நன்றாக பேச்சு திறமை கொண்ட நடிகை சரளாவை ,பார்த்த MGR அவர்கள்,உனக்கு அதிக திறமை இருக்கு நீ நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என கூறியதோடு,படிப்பிற்கான உதவி தொகையும் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.அதே போல் கோவை சரளா அவர்கள் சிறு வயதிலேயே விஜயகுமார் மற்றும் கே.ஆர்.விஜயா இருவரும் இணைந்து நடித்த வில்லி ரகம் என்ற படத்தில் தான் முதன் முதலில் நடித்துள்ளார்.
பிறகு,தன்னுடைய 15 வயதிலேயே முந்தானை முடிச்சி படத்தில் சிறு பகுதியில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து சிறப்பித்தார்.மேலும் 1984இல் வைதேகி காத்திருந்தாள்,தம்பிக்கு எந்த ஊரு ,நூறாவது நாள் போன்ற திரைப்படங்களை நடித்து அனைவரது மனதிலும் பதிந்தார்.பிறகு பாக்யராஜ் இயக்கிய சின்ன வீடு படத்தில் அம்மா கதாபாத்திரம் ஏற்று,படம் முழுவதும் (டேய் கோபாலு )என அழைத்து தனி பாராட்டை பெற்றார்.
1990 வரையிலும் சரளாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன.நகைச்சுவை ஜாம்பவான்களாக விளங்கிய கவுண்டமணி,செந்தில்,வடிவேலு ,விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து மக்களை மகிழ்வித்த கோவை சரளாவுக்கு 1990க்கு பிறகு பட வாய்ப்புகள் குறையவே தெலுங்கு மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.
மேலும் அவர்,2008ஆம் ஆண்டுக்கு பிறகு சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் போன சரளா சின்னத்திரையில் கால் பதித்தார்.சன் டிவியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வெளியான காஞ்சனா திரைப்படம் உண்மையிலே கோவை சரளாவிற்கு ஒரு பெரிய வெற்றியாக இருந்தன.
பிறகு விஸ்வாசம் படம் என இதுவரைக்கும் 800க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.குறிப்பாக கோவை சரளா,சதி லீலாவதி படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.அதன் பின் சிறையில் பூத்த சின்ன மலர்,வில்லு போன்ற படங்களில் ஒரு சில பாடல் வரிகளை பாடிய சரளா அவர்கள்,விஜயகாந்த் ராதிகா நடிப்பில் வெளிவந்த உழைத்து வாழ வேண்டும் என்ற படத்தில் தயாரிப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார் .
சமீபத்தில் கோவை சரளா அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
படம் பெயர் டபுள் டக்கர் ,இயக்குனர் பெயர் மீரா மஹதி மற்றும் ஹீரோவாக நடித்தவர் கிரேட் டாக்டர் தீராஜ் இவர் கூட நடிப்பது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.மேலும் 100 படத்தில் நடித்த மாதிரியான ஒரு அனுபவம்.மிகவும் வேகமான மற்றும் விவேகமான மனிதன்.இவரை எல்லாம் கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும் ,அப்போது தான் டாக்டர் போன்ற ஆட்கள் இன்னும் சாதிக்க முடியும்.
அவரையும் அந்த படத்தையும் வாழ்த்துகிறேன்.,
நான் நடித்த படத்தில் வடிவேலு கூட நடித்த எலிசபெத் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்த செய்த ஒன்று.நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்தன.அதிலும் அந்த வசனம் (பேஷன் ரோசு)அதில் தனி வரவேற்பு கிடைத்தது.பிறகு அந்த பிசின் கதாபாத்திரம் கோவை ப்ரொதேர்ஸ் சத்யராஜ் படம் நான் மட்டும் இல்லாமல் எல்லோரும் ரசித்து பாராட்டிய படம் .எனக்கு மிகவும் சந்தோசம்.ஷாஜகான் படத்தில் ஸ்நேகிதனை பாட்டு என்னால் மறக்க முடியாத ஒன்று.என்று பல சுவாரசியமான அனுபவங்களை தருணங்களை பகிர்ந்த கோவை சரளா பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.