கின்னஸ் சாதனையில் 10 நொடிகளில் தூள் தூளாக்கப்பட்ட 144 மாடிக்கொண்ட கட்டிடம்…

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

 

அபுதாபியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வணிக நிறுவனமாக இயங்கி வந்த கட்டிடம் ஒன்று வெறுமனே 10 நொடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் சயீத் அபுதாபியில் முக்கிய துறைமுகமாக இயங்கி வரும் பிரபலமான மீனா பிளாசா கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டது. 144 தளங்கள் மற்றும் 165 மீ கொண்ட இந்த கோபுரம் வெறுமனே 10 வினாடிகளில் சுக்கு நூறாக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இடிக்கப்பட்ட பகுதிகளிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெயரில் இது கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்தத் தகர்ப்புக்கு 6 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் வெடிப்பொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் தண்டு ஆகியவை பயன்படுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாட்டுக்கு திட்டமிடப்பட்ட 18,000 டெட்டனெட்டர்களை பயன்படுத்தி வெடிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு அப்பகுதியில் மெகா கட்டுப்மான பணி நடைபெற இருப்பதாகவும் அபுதாபி நகர நிர்வாகம் குறிப்பிட்டு உள்ளது.

இந்தக் கட்டிடத்தை இடிப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகக் அபுதாபி காவல் துறை தெரிவித்து உள்ளது. மேலும் பிளாஸ்டிக் வெடிபொருட்களைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் அவை மிகவும் பாதுகாப்பானவை என்றும் அந்த நகர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஏற்படும் தூசி மேகங்களைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அபுதாபியின் ஊடக அலுவலகமும் இடிப்பு அறிக்கையை இடிபட்ட சிறிது நேரத்திலேய தனது டிவிட்டர் பக்கத்தில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பான முறையில் இடிக்கப்பட்ட மிகப் பெரிய கட்டிடம் என்ற பெயரில் இந்தக் கட்டிடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.