தீபாவளி விருந்து: 'விடாமுயற்சி' வருகிறதோ இல்லையோ, இந்த 2 படங்களும் உறுதி..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.

ஆனால் அதே நேரத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’, ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’, கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அஜித்தின் ’விடாமுயற்’சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தீபாவளிக்கு ஒரு பக்கம் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் விருந்து அளிக்கின்றன என்றால், இன்னொரு பக்கம் ஓடிடியில் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட், வெற்றி பெற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த ’லப்பர் பந்து’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களும் வெளியாக இருப்பதால், ரசிகர்களுக்கு செம தீபாவளி விருந்து உறுதி என்று தெரிகிறது.

More News

சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி.. 'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு

பிக்பாஸ் செளந்தர்யாவுக்கு இப்படி ஒரு காதலா? பிரேக் அப் ஆனது ஏன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் ஒரு பிரச்சனை காரணமாக பிரேக் அப் செய்து விட்டதாகவும், சக போட்டியாளர்களிடம்

ஒரு வருடத்தை பூர்த்தி செய்த 'லியோ'.. லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான "லியோ" திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான நிலையில், இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. நூலிழையில் தப்பித்த தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் ஆகப்போகும் நிலையில், முதலாவது வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.