கால்கள் இழந்த காதலனை கைப்பிடித்த காதலி: இதுவல்லவோ உண்மை காதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் ரயில் விபத்தில் கால்களை இழந்த காதலனை, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்லூரி மாணவி ஒருவர் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் உண்மைக்காதலுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.
உதகமண்டலம் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 18 வயது ஷில்பா, அதே கல்லூரியில் படித்து வந்த விஜய்யை காதலித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக காதலித்த நிலையில் இந்த காதலுக்கு வழக்கம் போல் பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேலூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த விஜய், எதிர்பாராத வகையில் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். விபத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவருடைய இடது கால் துண்டிக்கப்பட்டதோடு வலது காலும் முற்றிலும் செயலிழந்தது. இதனால் கால்கள் இழந்த ஒருவரை தங்கள் வீட்டு மருமகனாக ஏற்றுக்கொள்ள ஷில்பாவின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை
ஆனால் காதலில் உறுதியாக இருந்த ஷில்பா, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி விஜய்யை இன்று திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை வார்டில் நடந்த திருமணம் உண்மைக்காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com