மீண்டும் இணையும் மணிரத்னம்-ஏஆர் ரஹ்மான்: இயக்குனர் ராஜீவ் மேனன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஐந்து பாகங்களை கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர் என்பது குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு ’பாவ கதைகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதில் ஐந்து இயக்குனர்களின் தனித்தனி பாகத்திற்கு தனித்தனி டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதா கொங்காராவின் பகுதிக்கு ‘இளமை இதோ’ என்ற டைட்டிலும் இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் கல்யாணி பிரியதர்ஷினியும் நடிக்கின்றனர். கெளதம் மேனன் பகுதிக்கு ‘அவரும் நானும் அவளும் நானும்’ என்ற டைட்டிலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ரிதுவர்மா நடிக்கின்றனர்.
மேலும் சுஹாசினி இயக்கும் பகுதிக்கு ‘காஃபி எனிஒன்’ என்ற டைட்டிலும் இதில் ஸ்ருதிஹாசன், அனுஹாசனும் நடிக்கின்றனர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதிக்கு ‘ரீயூனியன் என்ற டைட்டிலும் இதில் ஆண்ட்ரியா மற்றும் லீலா சாம்சன் நடிக்கின்றனர். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பகுதிக்கு ‘மிராக்கிள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இதில் பாபிசிம்ஹா, முத்துகுமார் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து வெளியிடவிருப்பதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
The trailer of 5 journeys, launched by 2 legends! Tomorrow is definitely a #PuthamPudhuKaalai @PrimeVideoIN. @arrahman #ManiRatnam @andrea_jeremiah, #SikkilGurucharan #LeelaSamson @nivaskprasanna #TSSuresh @aditi1231 pic.twitter.com/FGxBFTIMdV
— Rajiv Menon (@DirRajivMenon) October 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments