மீண்டும் இணையும் மணிரத்னம்-ஏஆர் ரஹ்மான்: இயக்குனர் ராஜீவ் மேனன் தகவல்

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஐந்து பாகங்களை கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் இயக்கி உள்ளனர் என்பது குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு ’பாவ கதைகள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதில் ஐந்து இயக்குனர்களின் தனித்தனி பாகத்திற்கு தனித்தனி டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதா கொங்காராவின் பகுதிக்கு ‘இளமை இதோ’ என்ற டைட்டிலும் இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் கல்யாணி பிரியதர்ஷினியும் நடிக்கின்றனர். கெளதம் மேனன் பகுதிக்கு ‘அவரும் நானும் அவளும் நானும்’ என்ற டைட்டிலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ரிதுவர்மா நடிக்கின்றனர்.

மேலும் சுஹாசினி இயக்கும் பகுதிக்கு ‘காஃபி எனிஒன்’ என்ற டைட்டிலும் இதில் ஸ்ருதிஹாசன், அனுஹாசனும் நடிக்கின்றனர். ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதிக்கு ‘ரீயூனியன் என்ற டைட்டிலும் இதில் ஆண்ட்ரியா மற்றும் லீலா சாம்சன் நடிக்கின்றனர். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பகுதிக்கு ‘மிராக்கிள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இதில் பாபிசிம்ஹா, முத்துகுமார் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து வெளியிடவிருப்பதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

கப்பு முக்கிய பிகிலு... கணவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு பிக்பாஸ் சென்ற நடிகை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு அதில் கலந்துகொள்ளும் 16 போட்டியாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இணையத்தில் வைரலாகும் அமலாபாலின் பீச் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ரிலீஸா? ஆர்ஜே பாலாஜியின் டுவீட்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாகாது

குழந்தைங்களா, நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காம இருக்கணும்: சிஎஸ்கே வீரரின் டுவீட்

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நடிகை தமன்னாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்