பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது உள்பட சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கான ஒப்பந்தம் மொத்தம் 40 பக்கங்கள் என்று கூறப்படும் நிலையில், அந்த 40 பக்கங்களையும் பொறுமையாக உட்கார்ந்து யாராவது ஒரு போட்டியாளர் வாசித்திருக்கிறாரா என்பது சந்தேகமாக உள்ளது.
அந்த வகையில், இந்த சீசனின் போட்டியாளர்களான முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இருவரும் பிக் பாஸ் ஒப்பந்தம் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, "40 பக்கங்களை முழுமையாக நீ வாசித்தாயா?" என சௌந்தர்யா, முத்துக்குமாரை கேட்கிறார்.
அதற்கு முத்துக்குமார் , "நான்கு பக்கங்களை வாசித்தேன். 40 பக்கங்களை எப்படி உட்கார்ந்து பொறுமையாக வாசிக்க முடியும்? ஆனால், அதே நேரத்தில், அதை வாசிக்காதது என்னுடைய தவறு என்று இப்போது உணர்கிறேன். என்னுடைய அண்ணன் ஒருவரிடம் கொடுத்து, முழுமையாக இதை வாசித்து, முக்கியமானதை மட்டும் எனக்கு சொல்லுங்கள் என்று கூறினேன். அது என்னுடைய தவறு. முழுமையாக இங்கு வருவதற்கு முன்பு வாசித்திருக்க வேண்டும்," என்று கூறுகிறார்.
சௌந்தர்யாவும், "நானும் 40 பக்கங்களை முழுமையாக வாசிக்கவில்லை," என்று கூறிய நிலையில், மொத்த போட்டியாளர்களுமே ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்காமல் கையெழுத்திட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Both #Muthukumaran & #Soundariya didn’t read BB rules 💥💥💥 Nala Pandrengaaa Jiii !#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamil #BiggBossTamilSeason8 #BiggBossNaveenpic.twitter.com/aTDZ6IkEE3
— biggboss_naveen (@biggboss_naveen) October 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com