பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது உள்பட சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கான ஒப்பந்தம் மொத்தம் 40 பக்கங்கள் என்று கூறப்படும் நிலையில், அந்த 40 பக்கங்களையும் பொறுமையாக உட்கார்ந்து யாராவது ஒரு போட்டியாளர் வாசித்திருக்கிறாரா என்பது சந்தேகமாக உள்ளது.

அந்த வகையில், இந்த சீசனின் போட்டியாளர்களான முத்துக்குமார் மற்றும் சௌந்தர்யா இருவரும் பிக் பாஸ் ஒப்பந்தம் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, 40 பக்கங்களை முழுமையாக நீ வாசித்தாயா? என சௌந்தர்யா, முத்துக்குமாரை கேட்கிறார்.

அதற்கு முத்துக்குமார் , நான்கு பக்கங்களை வாசித்தேன். 40 பக்கங்களை எப்படி உட்கார்ந்து பொறுமையாக வாசிக்க முடியும்? ஆனால், அதே நேரத்தில், அதை வாசிக்காதது என்னுடைய தவறு என்று இப்போது உணர்கிறேன். என்னுடைய அண்ணன் ஒருவரிடம் கொடுத்து, முழுமையாக இதை வாசித்து, முக்கியமானதை மட்டும் எனக்கு சொல்லுங்கள் என்று கூறினேன். அது என்னுடைய தவறு. முழுமையாக இங்கு வருவதற்கு முன்பு வாசித்திருக்க வேண்டும், என்று கூறுகிறார்.

சௌந்தர்யாவும், நானும் 40 பக்கங்களை முழுமையாக வாசிக்கவில்லை, என்று கூறிய நிலையில், மொத்த போட்டியாளர்களுமே ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்காமல் கையெழுத்திட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

இந்த வார நாமினேஷன்.. சிக்கிய 4 பெண் போட்டியாளர்கள்.. யார் வெளியேற வாய்ப்பு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 15வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அன்றைய எபிசோடின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா ரஜினிகாந்த்? முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் வீடு திரும்பினார் என்பதும்,

இயக்குனராகிறார் ஜெயம் ரவி.. முதல் பட ஹீரோ ஒரு காமெடி நடிகரா?

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா ஏற்கனவே பிரபல இயக்குனராக இருக்கும் நிலையில், ஜெயம் ரவியும் இயக்குனராக இருப்பதாகவும்,

ஹாலிவுட் வெப்தொடரில் அஜித் பட நடிகை.. மாஸ் டிரைலர் ரிலீஸ்..!

அஜித் ஜோடியாக நடித்த நடிகை ஹாலிவுட் வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 மாதங்கள் கழித்து மனைவியின் பிரசவ வலி வீடியோவை வெளியிட்ட இர்பான்.. குவியும் கமெண்ட்ஸ்..!

பிரபல யூட்யூபர் இர்பான் மனைவிக்கு, கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில், 3 மாதம் கழித்து, தனது மனைவி பிரசவ வலியுடன் இருப்பது, குழந்தை பிறப்பது