மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டைட்டில் பட்டம் இந்த ஜோடிக்கு தான்! குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை மூன்றாவது சீஸனில் ஆறு ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் அறிந்ததே. யுவராஜ் - காயத்ரி, யோகேஷ் - நந்தினி, சரத்- கீர்த்தி, ஜேக் - ரோஷினி, ராஜ்மோகன் - கவிதா மற்றும் வினோத் - ஐஸ்வர்யா ஆகிய ஆறு ஜோடிகள் இறுதிப் போட்டிக்காகு தகுதி பெற்ற ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆறு ஜோடிகளில் சரத் - கீர்த்தி ஜோடி ஜோடி டைட்டில் பட்டத்தை வென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ரன்னர்-அப் ஜோடி ஜேக்-ரோஷினி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments