வரலட்சுமி நடிக்கும் 'தத்வம்சி': டைட்டிலில் இத்தனை உள்ளர்த்தமா?

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

பிரபல நடிகை வரலட்சுமி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘தத்வம்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டிலை பல்வேறு உள்ளர்த்தங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ரமணா கோபிஷெட்டி என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார். பிரபல தெலுங்கு நடிகர் இஷான் மற்றும் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

சமஸ்கிருதத்தில் உள்ள வார்த்தையான ‘தத்வம்சி’ என்பதற்கு ’நான் தான்’ என்று பொருள். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் உள்ள நான்கு கொள்கைகளில் ஒன்று இந்த ‘தத்வம்சி’ என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மனுடைய ஆத்மாவின் ஒற்றுமையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ‘தத்வம்சி’ என்பதும், இந்த படம் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தும் கதையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் லோகோவில் உள்ள அடையாளங்கள் குண்டலினியை குறிப்பிடுகிறது என்பதும் மனித குல வரலாற்றில் இதுவரை அறியப்படாத அற்புதமான சக்தி, எல்லையற்ற உணர்ச்சி, பழிவாங்குதல் ஆகியவை இந்த மோஷன் போஸ்டரில் உள்ள உள்ளர்த்தங்கள் ஆகும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கப்பட்ட புதிய திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரிஷ் உத்தமன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.இ.எஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், சாம் சி.எஸ் இசையில், ஷியாம் நாயுடு ஒளிப்பதிவில், மார்த்தாண்ட் வெங்கடேஷ் படத்தொகுப்பில், சந்திரபோஸ் பாடல் வரிகளில், பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.