சாக்கடையை பற்றி பேச வேண்டாம்: பாலாஜி குறிப்பிட்டது யாரை?
- IndiaGlitz, [Wednesday,June 20 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்பதை பார்வையாளர்கள் ஊகித்துவிட்டனர்.
அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவிலேயே பாலாஜிக்கும் நித்யாவுக்கு வெங்காயம் விஷயத்தில் பிரச்சனை வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள 3வது புரமோ வீடியோவில் மும்தாஜ் பாலாஜியிடம் 'ஏன் உங்கள் மனைவி உங்கள் மீது அதிக கோபம் கொள்கிறார் என்று கேட்க அதற்கு பாலாஜி, 'கொடுத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது அவர்களுக்கே பிரச்சனையாகிவிடும் என கூறுகின்றார். பின்னர் செண்ட்ராயன், பாலாஜியிடம், 'உங்களையும் உங்கள் மனைவியையும் பிரிக்க தூண்டிய நபர் யார்? என்பதை கண்டுபிடியுங்கள் என்று கூற அதற்கு பாலாஜி, 'இந்த நேரத்தில் சாக்கடையை பற்றி ஏன் பேச வேண்டும்? நான் எல்லா சாக்கடையையும் தான் கூறுகின்றேன்' என்று கூறினார். சாக்கடை என்று பாலாஜி யாரை கூறினார் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் தற்போது நெட்டிசன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய #பிக்பாஸ் இன் அடுத்த ப்ரோமோ! #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/qEyFuj3aBm
— Vijay Television (@vijaytelevision) June 20, 2018