பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோவில் பற்றி தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!
- IndiaGlitz, [Thursday,January 06 2022]
இந்து மதத்தில் கோவில்கள் என்றாலே அதன் திருவுருவச் சிலைதான் பிரதான இடம்பிடித்திருக்கும். இப்படியிருக்கும்போது அசாம் மாநிலத்தில் ஒரு பெண்ணின் யோனியை (பிறப்புறுப்பை) தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்திவரும் கோவில் பற்றிய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள காமக்யா எனும் கோவிலில் ஒரு பெண் மேடையின் மீது அமர்ந்திருப்பது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழே ஒரு பெண்ணின் யோனி உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யோனி உருவத்தைத்தான் மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
மேலும் யோனியை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாம் அந்தப் பெண் கடவுள் வருடத்தில் 3 நாட்கள் மாதவிலக்கில் இருப்பதாகக் கூறி அந்தக் கோவிலை மூடுவிட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதனால் பிரம்மப்புத்திரா நதி குறிப்பிட்ட அந்தத் தினத்தில் சிவப்புநிறத்தில் ஓடுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கையும் இருந்துவருகிறது.
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோவிலில் வயதுக்கு வராத இளம்பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்படுகின்றன.
ஆதிகாலத்தில் இயற்கையைப் பார்த்து பயந்த மனிதன் ஒருகட்டத்தில் மரம், மழை போன்ற இயற்கைச் சார்ந்த பொருட்களை வழிபட ஆரம்பித்துவிட்டான். அதேபோல மனிதனின் பிறப்பிற்குக் காரணம் தேடிய நமது முன்னோர்கள் ஆண்/பெண் பிறப்புறுப்புகளுக்கு மதிப்புக் கொடுத்து அதை வழிபட்டதாகவும் இதுபோன்ற வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் உதாரணங்களை எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் அசாம் மாநிலத்தின் காமக்யா கோவிலும் ஒரு புது ஆச்சர்யத்தைக் கொண்டிருக்கிறது.