தியேட்டரில் 50% இருக்கைகள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகள்
- IndiaGlitz, [Thursday,April 08 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு சற்றுமுன் விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி என்றும் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி என்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பில் தெரிவித்துள்ளது
மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் மால்கள் பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது