'தர்பார்' படத்தின் டேக்லைன் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படத்தின் டைட்டில் 'தர்பார்' என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள டேக்லைன் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
நல்லது, கெட்டது, மோசமானது இவற்றில் என்னிடமிருந்து எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்' என்பதுதான் இந்த படத்தின் டேக்லைன். (You Decide you want me to be GOOD BAD or WORSE' ). மேலும் மும்பை பின்னணி, போலீஸ் நாய், ஐபிஎஸ் பேட்ஜ், துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவை இந்த படம் ஒரு போலீஸ் படம் என்பதையும் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் 2020ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கு 'பேட்ட' விருந்தளித்த நிலையில் அடுத்த ஆண்டும் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் பொங்கல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com