கிரிப்டோ கரன்சி தெரியுமா மக்களே..?! பிட் காயின் தடையை நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
- IndiaGlitz, [Wednesday,March 04 2020]
கிரிப்டோ கரன்சி என்று அழைக்கப்படும் மெய்நிகர் பணமான பிட் காயின் மீதான ரிசர்வ் வங்கியின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெய் நிகர் பணம் எனப்படுவது நம் கைகளில் புழங்காமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வசதியாக உருவாக்கப்பட்ட பணமாகும். இந்தியாவில் இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு போதியளவு இல்லாததால் இதை இந்தியாவிற்குள் பயன்டுத்த ரிசர்வ் வங்கியானது தடைவிதித்திருந்தது.
பிட்காயின் மட்டுமல்ல அது போல ஏகப்பட்ட மெய் நிகர் பணமானது உலக இணையத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என் பலர் உலகம் முழுவதும் குரல் எழுப்பி வந்தனர்.
இந்தியாவில் தடை இருந்தாலும் இங்கும் பலர் சட்டத்திற்கு விரோதமாக பிட் காயின் வாங்குவதும் சேமித்து வைப்பதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அதில் இதற்கு முன் ரிசர்வ் வங்கி பிட் காயினுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி சட்டபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பிட்காயினானது 6,47,024 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.