சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொற்காலம்.. 2023ல் வெற்றி பெற்ற அறிமுக இயக்குனர்கள்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

கடந்த பல ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன என்றும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பொதுமக்களும் ரசிகர்களும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சின்ன பட்ஜெட் படங்களுக்கு கொடுப்பதில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொற்காலம் என்று கூறும் வகையில் 2023 ஆம் ஆண்டில் பல சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சின்ன பட்ஜெட்டில் உருவான குறிப்பான அறிமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் பல இந்த ஆண்டில் வெற்றி பெற்றுள்ளன.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான ’போர்த்தொழில்’ படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ’டாடா’, ஹரிஹரன் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் உருவான ’ஜோ’ ஆகிய படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ’அயோத்தி’ விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ ஆகிய படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான ’சபாநாயகன்’ படமும் நல்ல வெற்றி பெற்றன. மேற்கண்ட படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி அறிமுக இயக்குனர்கள் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றால் தான் திரை உலகம் ஆரோக்கியமான வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது