மிஷ்கின்-விக்ராந்த் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் கதை என்ன?

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்களை குறிப்பாக இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழுவினர் அறிக்கை ஒன்றில் விளக்கியுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஒரு படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் இருக்க  வேண்டும், கதைக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.  அவ்வாறு தலைப்பிட பட்ட படம் தான் சுட்டுப்பிடிக்க உத்தரவு.  மிகுந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குபவர் ராம் பிரகாஷ் ராயப்பா. தமிழில் எண் ஒன்றை அழுத்தவும்  என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.  இப்படத்தை 'கல்பதரு பிக்சர்ஸ்' சார்பில் திரு. P K ராம் மோகன் தயாரிக்கவுள்ளார்.  இயக்குனர் மிஷ்கின், மற்றும் விக்ராந்த்  ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் பிரபல இயக்குனர்  சுசீந்திரனும் நடிக்க உள்ளார் என்பது சிறப்பு செய்தி. கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள்  விரைவில் அறிவிக்கப்படவுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில் , ''விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான 'கிரைம்' நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உக்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது ''.

More News

நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை: விஷால் குறிப்பிடும் ஜனநாயக கேலிக்கூத்து

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்க கூறப்பட்ட காரணம், அவரை முன்மொழிந்த இருவர் தாங்கள் விஷாலின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று கூறியதுதான் என்று கூறப்பட்டது.

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' சென்சார் தகவல்கள்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கும்

கனடா நாட்டின் ஆபாச நடிகை மர்ம மரணம். தற்கொலையா?

கனடாவை சேர்ந்த ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 23

25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவர்

25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன? விஷால் அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே