வரலாற்று ஆசிரியர்களே முகம் சுளிக்கும் அரசன் காலிகுலா கதை… ஆடியோ வடிவில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜுலியஸ் சீசரின் அடையாளமாகப் பெயர்ப்பெற்ற ரோம மன்னன் ஒருவரை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் காலிகுலா என்றே அழைக்கின்றனர். காலிகுலா என்றால் குட்டிச் செருப்பு, வீரர்களின் பூட்ஸ் என்று அர்த்தமாம். ஏன் அப்படி செருப்போடு ஒப்பிட்டு ஒரு மன்னனை அழைக்கிறார்கள் என்றால் அந்த மன்னன் செய்த காரியம் அப்படி. புகழ்பெற்ற ரோம தளபதி ஜெர்மானிகஸ்க்கு பிறந்தவர்தான் காலியஸ் ஜுலியஸ் சீசர் ஜெர்மானிகஸ். ரோம மன்னன் டைபிரியஸின் சதிச் செயலால் தளபதி ஜெர்மானிகஸ் மரணமடைந்தான்.
தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு குட்டி ஜெர்மானிகஸ்ஸின் வாழ்க்கை தனித்தீவில் கழிகிறது. இப்படி தனித்தீவில் வாழ்க்கையை கழித்த இவர் தனது குட்டி கால்களில் பூட்ஸ்களை அணிந்து கொண்டு வலம் வருகிறார். இவரைப் பார்த்த பலரும் குட்டி ஜெர்மானிகஸை காலிகோ (குட்டி பூட்ஸ் அணிந்தவர்) என்றே அழைக்கின்றனர். இந்தப் பெயரே பின்னாளில் காலிகுலா என மாறுகிறது.
இப்படி தனித்தீவில் வாழ்க்கை நடத்திய ஒரு சிறுவன் பின்னாட்களில் ரோமப் பேரரசின் மன்னனாக மாறுகிறார். இப்படி உயரத்தை எட்டிய காலிகுலா முதலில் மக்களுக்கான அரசனாகத்தான் இருக்கிறார். ஆனால் சிறுமையில் பட்ட தனிமை, வேதனை, வருத்தம் போன்ற எல்லா குணங்களும் அரசனான பின்வு தலைத்தூக்கத் துவங்குகிறது. கூடவே விரக்தியில் இருந்து பிறந்த மகிழ்ச்சி சந்தேகத்தையும் வரவழைக்கிறது.
இந்தக் குணங்களால் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருகட்டத்தில் இகழப்படுகிறார். ஏன் இந்த இகழ்ச்சி. வரலாற்று ஆய்வாளர்களே இவரது பெயரை உச்சரிக்க மறுத்து காலிகுலா என ஏசுகின்றனர். இந்த ஏச்சுதலுக்கு என்ன காரணம்? காலிகுலாவை தெருவில் வைத்து ஒரு மனிதன் கத்தியால் குத்தி கொல்கிறார். ஆனால் ஒருவரும் தடுக்கவில்லை. ஏன் அரசாங்க ஊழியர்கள் கூட தடுக்கவில்லை. இவரது இறப்புக்கு சொந்த அக்கா தங்கைகள் கூட கண்ணீர் விடவில்லை. இப்படியொரு மனிதருக்குப் பின்னால் நிகழ்ந்த வரலாற்றுக் கதையை Vaarta app இல் கேட்டு மகிழுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments