விஜய்காந்த் கால் விரல்கள் அகற்றப்பட்டதா? தேமுதிக விளக்க அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நீரிழிவு நோய் காரணமாக அவருடைய கால் விரல்கள் அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவத:
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையை ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவு பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments