நாய்க்கறிக்கு தடை விதித்த மாநில அரசு!!! போர்க்கொடி தூக்கிய மக்கள்!!!
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
நாகலாந்தில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாநில இறைச்சி விற்பனையில் நாய்களின் இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. தற்போது நாகலாந்தில் நாய் இறைச்சி இறக்குமதிக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்பு தந்துள்ளனர். ஆனால் நாகலாந்தின் பெரும்பாலான மக்கள் இந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பழங்காலத்தில் இருந்தே பூர்வக் குடிகளின் முக்கிய உணவாக நாய் இறைச்சி இருந்து வருகிறது. திடீரென மாநில அரசு, மக்களின் உணவு விஷயங்களில் தலையிடுவது சரியாக இருக்காது என்ற எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. பாரம்பரிய பழக்கமான உணவுகளுக்கு தடை விதிப்பது எந்த வகையில் சரியானது என்று போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். உணவு உண்ணும் உரிமையில் மாநில அரசு தலையிடுகிறது எனவும் சில கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் இத்தகைய முடிவு கடும் தோல்வியைச் சந்திக்கும் எனவும் சிலர் காரசாரமான சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.