போறபோக்குல விளையாட்டா… 2021 கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சில வித்திரங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்களின் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் பட்டியலில் சில விசித்திரமான சாதனைகளும் இடம் பிடித்து இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூக் ராபர்ட் என்பவர் வளர்த்து வரும் சுண்டெலிகள் தன்னுடைய எஜமானருக்கு வெறும் 30 வினாடிகளில் 28 முறை கைகுலுக்கி உலகச் சாதனை படைத்துள்ளது. இந்த விசித்திரச் சம்பவத்தைத் தொடர்ந்து இதேபோல பல சாதனைகளும் இந்த ஆண்டில் இடம்பெற்று இருக்கிறது.
கட்டழகுக்காக புஸ்-அப் எடுப்பவர்களுக்கு மத்தியில் கின்னஸ் சாதனைக்காகவே ஒரு பெண்மணி புஸ்-அப் எடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈவாக் க்ளேர்க் என்ற பெண்மணி 24 மணி நேரத்தில் 5,555 முறை புஸ்-அப் எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறார். இதற்குமுன்பு ஒரே நாளில் 3,737 முறை புஸ்-அப் எடுத்ததே உலகச் சாதனையாகக் கருதப்பட்டது. இந்தச் சாதனையை ஒருபெண்மணி முறியடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர 136 சென்டி மீட்டர் அதாவது நாலரை அடி உயரம் மட்டுமே உள்ள ஃப்ரன்க் ஃப்யிக் ஹாசிம் என்பவர் பேருந்து ஓட்டுநராகி உலகச் சாதனை படைத்து இருக்கிறார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகச் சாதனை புரிய வேண்டுமென்றால் மெனக்கெட்டு உயிர் போகும் காரியத்தை செய்ய வேண்டும் என்பதில்லை. விளையாட்டுத் தனமாகக் கூட உலகச் சாதனையைப் படைக்கலாம் என மற்றொரு சிறுவன் நிரூபித்து இருக்கிறான்.
நைஜீரியாவைச் சேர்ந்த 12 வயது சுட்டிப்பையன் தலையில் ஒரு கால்பந்தை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் தனது காலாலும் ஒரு கால்பந்தை உதைக்கிறான். இப்படி கால்பந்தை உதைக்கும்போது தலையில் உள்ள பந்து விழாமல் அப்படியே இருக்கிறது. இந்த மாதிரி 111 முறை கால்பந்தை உதைத்து தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து விட்டான்.
இந்தச் சாதனைகள்கூட பரவாயில்லை. இதற்காக கொஞ்சமாவது மெனக்கெட வேண்டியருக்கிறது. ஆனால் வாயில் போட்டு மெல்லும் சுவிங்கத்தின் கவரை பெரிய சங்கிலி கயிராக ஒருவர் திரித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார். இதற்காக எத்தனை மூட்டை சுவிங்கம் சாப்பிட்டாரோ தெரியாது. ஆனால் இவர் திரித்த சங்கிலி கயிர் 1 லட்சத்து 6 ஆயிரத்து 810 அடி நீளத்தைக் கொண்டிருந்தது. இந்நிகழ்வுகளைப் பார்த்தால் நாமும் ஏதாவது செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து விடலாமா எனத் தோன்றும்.. அதுஒன்றும் தவறில்லை… முயற்சிதான் வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout