தென்னிந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.. கர்நாடகா தேர்தல் குறித்து 'லியோ' பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து தென்னிந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என ‘லியோ’ படத்தின் பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக இல்லாத கட்சிகளின் ஆட்சி நடந்து வரும் நிலையில் தற்போது தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து திராவிட மண்ணிலிருந்து பாஜக விரட்டி அடிக்கப்பட்டது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் திரைக்கதை ஆசிரியர் 'ஆடை’ படத்தின் இயக்குனருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து கூறியதோடு ’தென்னிந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே திரை உலக பிரபலங்களான கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Well done ✋. #KarnatakaElectionResults2023 pic.twitter.com/qZESEdNZu7
— Rathna kumar (@MrRathna) May 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments