இறந்த தாயின் உடலை ஜன்னல் வழியே பார்த்து அழுத இளைஞர்: மனதை உருக்கும் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரனோவால் இறந்த தாயை அருகே சென்று பார்க்க அனுமதி கிடைக்காததால் ஜன்னல் வழியே பார்த்த இளைஞர் ஒருவரின் புகைப்படம் மனதை உருக்கும் வகையில் உள்ளது.
பாலஸ்தீன நாட்டில் உள்ள 73 வயது பெண் கொரனோவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்., அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ஜிகாத் என்பவருக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஜன்னலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தனது தாயாரை அந்த ஜன்னல் வழியாக கடந்த சில நாள்களாக பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது தாயார் இறந்து விட்டதாக செய்தி அறிந்து கதறி அழுதார்.
இருப்பினும் கொரனோவால் இறந்த தாயின் உடலைக்கூட பார்க்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தாயாரை ஜிகாத் அருகில் இருந்து பார்த்தால் அவருக்கும் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் அவருக்கு அனுமதி அளிக்காததால் அதிர்ச்சி அடைந்த ஜிகாத், மீண்டும் ஜன்னல் மேல் ஏறி உட்கார்ந்து தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
பெற்ற தாயின் இறந்த உடலைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவது குறித்த குறித்த இந்த புகைப்படத்தை பலர் இதயத்தைக் கல்லாக்கிக் பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com