விட்ட குறை தொட்ட குறையே இருக்கக்கூடாது: அனைவருக்கும் பண்ணிடுங்க... அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!!!

  • IndiaGlitz, [Monday,June 15 2020]

 

டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அசாதாரணமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா மற்றும் டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இரண்டாவது அதிகம் பாதிப்புள்ள மாநிலமாக தமிழ்நாடு, அடுத்த நிலையில் டெல்லி விளங்கி வருகிறது. இதுவரை 41,182 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற ஜுலை மாதத்தின் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் எனவும் ஒரு கணிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கையை குறைக்கும் வகையில் டெல்லி ஆட்சிப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை விரைந்து நடத்தி விட வேண்டும் என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் படி ஜுலை 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் தலைமையிடமாக இருக்கும் டெல்லி என்பது உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். எனவே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியானது. எனவே பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் 500 ரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனா வைரஸ் விவாரகாரத்தில் மத்திய அரசின் துரிதமான நடவடிக்கையை எடுத்து வருவதைப் பார்த்தால் நிலைமை மோசமாக இருக்குமோ என்ற அச்சத்தையும் சிலர் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

More News

AC யில இருந்தா கொரோனா வருமா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் கட்டாயப்படுத்தப் பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 44: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கையும்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடா? தமிழக அரசு அதிரடி முடிவு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது என்பது தெரிந்ததே

காசி விவகாரம்: நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

நாகர்கோவிலைச் சேர்ந்த காசியும் அவரது நண்பர்களும் பள்ளி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வை சீரழித்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல் 

வெளி நாட்டிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி மலேசியாவில் இருந்து