close
Choose your channels

ஒரே மாதத்தில் முடிவடைந்த ஆர்.கண்ணனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1972ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படம் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான நிலையில் 49 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு அதே டைட்டிலில் சமீபத்தில் தொடங்கியது என்பதும், இந்தப் படத்தை ஆர் கண்ணன் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது

முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா, ரமா ப்ரியா, சச்சு, ஜெயகுமாரி ஆகியோர் நடித்திருந்த ’காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக்கில் மிர்ச்சி சிவா, யோகிபாபு, ப்ரியா ஆனந்த், புகழ், ஷிவாங்கி, ஊர்வசி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment