'மார்க் ஆண்டனி' படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் இவரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ட்ரெய்லரில் ஆச்சரியமான பல விஷயங்கள் இருந்த நிலையில் அதில் ஒன்று சில்க் ஸ்மிதா திடீரென தோன்றியதுதான். சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தில் எப்படி சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்தார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. ’மார்க் ஆண்டனி’ படத்தில் சில்க் ஸ்மிதா நடித்தவர் இன்ஸ்டாகிராம் மாடல் நடிகை விஷ்ணுபிரியா காந்தி என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரை நடிக்க வைத்து அதில் சில கிராபிக்ஸ் முக அமைப்பை மாற்றி உள்ளதாகவும் அதனால் தான் படத்தில் அச்சு அசல் சில்க்ஸ்மிதாவே நடித்தது போல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சில்க் ஸ்மிதா தோன்றும் காட்சிகள் நிச்சயம் 90கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரிய த்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.