சிம்புவின் 'வாங்க மச்சான் வாங்க' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 22 2019]

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெட் கார்டு' பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது 'செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'வாங்க மச்சான் வாங்க' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் சிங்கிளை போலவே ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

More News

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் '2.0' கனெக்சன்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, முனி 2 காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாத நடிகர்: அஜித்துக்கு தந்தையாக நடித்த நடிகர் பாராட்டு

அஜித் நடித்த 'கிரீடம்' படத்தில் அவருக்கு தந்தை கேரக்டரில் நடித்த நடிகர் ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் 'யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல்,

மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கனா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. குறிப்பாக ஐஸ்வர்யாவின் அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய நடிப்புக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது

அஜித்தின் அறிக்கையை பாராட்டிய அதிமுக, திமுக, காங்கிரஸ் தலைவர்கள்

அரசியல் குறித்த தனது நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம், தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் விழுந்துவிட கூடாது

சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு: பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

நடிகர் சிம்பு இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்று நான் கூறியதை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.