'வேட்டி கட்டு' 'விஸ்வாசம்' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

'விஸ்வாசம்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'வேட்டி' கட்டு' என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. டி.இமான் இசையில் உருவான இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த பாடலும் முதல் பாடல் போலவே சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டீசரும் தயாராகிவிட்டதாகவும் வெகுவிரைவில் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளி வரும் என்றும் கூறப்படுகிறது. 'விஸ்வாசம்' படம் வெளியாக இன்னும் ஒருமாதம் கூட இல்லை என்பதால் விஸ்வாசம் கொண்டாட்டம் இனி தினமும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.