close
Choose your channels

'விஸ்வாசம்' செகண்ட்லுக் வெளியிடும் தேதி - நேரம் அறிவிப்பு

Wednesday, October 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் வசன படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை அஜித் முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் படமாக்கப்பட உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பும் வரும் வாரம் மும்பையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் செகண்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. நாளை அதாவது அக்டோபர் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த படத்தின் செகண்ட்லுக் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த இரண்டாவது லுக்கையும் உலக அளவில் டிரெண்ட் ஏற்படுத்த அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் அஜித், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment