கோவில் கலசங்களில் விதை வைப்பது ஏன்? அறிவியல் காரணங்களை விளக்கும் ஆடியோ!
- IndiaGlitz, [Tuesday,May 11 2021]
இந்தியக் கலாச்சாரத்தில் பழங்காலம் தொட்டு இன்றுவரை கோவில் கலசங்களில் விதைகளை அதுவும் வரகு போன்ற பழமையான தானியங்களை வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதைகள் பெரும்பாலும் செழிப்பை உணர்த்துவதற்கு வைக்கப்படுவதாகப் பண்பாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் வறட்சி காலத்தில் இந்த விதைகள் மக்களின் பசியைப் போக்குவதற்கு பயன்பட்டு இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்நிலையில் 1,000, 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டிய கோவில் கோபுரங்களில் உள்ள விதைகள் இன்றைக்கும் முளைக்கும் தன்மையைக் கொண்டு இருக்குமா? அல்லது வறட்சி காலத்தில் அதைப் பயன்படுத்தத்தான் முடியுமா? அதோடு இந்த விதைகள் உண்மையில் ஏன் வைக்கப்படுகின்றன என்பது போன்ற அறிவியல் கேள்விகளுக்கு பதில் அளித்து வரலாற்று அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம் மற்றும் சுழலியல் ஆய்வாளர் தினேஷ் போன்றோர் விளக்கம் அளித்து உள்ளனர்.
கோவில்கள் மட்டும் அல்லாது அனைத்து பூஜை, விசேஷங்களிலும் தானியங்களைப் பயன்படுத்தும் பழக்கம் இந்திய மரபில் இருந்து வருகிறது. இதுபோன்ற பழக்கம் உண்மையில் ஏன் பின்பற்றப்படுகிறது? அறிவியல் அடிப்படையில் இது மனிதர்களின் எதிர்காலத்திற்கோ அல்லது வளர்ச்சிக்கோ பயன்படுமா? என்பது போன்ற கேள்விகளும் சாதாரணமாகவே எழுகிறது.
இந்நிலையில் கோவில் கோபுரங்களில் வைக்கப்பட்டு இருக்கும் விதைகளின் அறிவியல் நிலைப்பாடு குறித்து பிரத்யேக ஆடியோ vaarta ஆப்பில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ வடிவம் பண்பாட்டு நடைமுறைகளில் நாம் கொண்டாடும் பழக்கங்களுக்குப் பின்னால் உண்மையில் அறிவியல் காரணங்களோ அல்லது வருங்கால சந்ததிக்கு பயன்படும் என்ற நோக்கமோ இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக விளங்கிக் கொள்ள இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.