'விக்ரம்' ரிலீஸ் ஆன அதே தேதி: மீண்டும் ரூ.500 கோடி மேஜிக் நடக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,August 17 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் சினிமாவுக்கே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் நெடுமுடி வேணு கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பார் என்றும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் காஜல் அகர்வால் இந்த படத்தின் படப்பிடிப்பில் செப்டம்பர் முதல் கலந்து கொள்வார் என தெரிகிறது.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 60% முடிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று ’விக்ரம்’ ரிலீஸ் ஆன அதே தேதியில் அடுத்த ஆண்டு ’இந்தியன் 2’ படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம், ’விக்ரம்’ செய்த ரூ.500 கோடி வசூல் என்ற மேஜிக்கை மீண்டும் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒரே ஷெட்யூலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்? டிசம்பரில் இன்னொரு படம்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தளபதி 67' முழுக்க முழுக்க லோகேஷ் படமா? கசிந்த முக்கிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்: பிரபல இயக்குனருக்கு கமல் வாழ்த்து!

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் என பிரபல இயக்குனருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணனால் சர்ச்சை!

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு செய்த புகைப்படம் ஒன்றை பார்த்த நெட்டிசன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசு இல்லையா என பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இனிமே எப்படி லீக் ஆகும்ன்னு பார்ப்போம்.. 'வாரிசு' இயக்குனர் வம்சியின் அதிரடி!

 தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்,விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில்