close
Choose your channels

'குக் வித் கோமாளி' போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்..!

Tuesday, April 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி என்பதும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உண்டு என்பதும், ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த நிகழ்ச்சியை தினமும் பார்க்கும் வழக்கமுடையவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நான்காவது சீசனில் குக்குகளாக ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் அதேபோல் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறிய நிலையில் மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கசிந்த தகவல்கள் இதோ



நடிகை விசித்ராவுக்கு சம்பளம்: 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், ஷிவாங்கி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், பிரஞ்சு நடிகையான ஆன்ட்ரியாவுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரமும், சிருஷ்டி டாங்கேவுக்கு 25 முதல் 35 ஆயிரம், ராஜ் அய்யப்பாவுக்கு 20 முதல் 26 ஆயிரம், மைம் கோபிக்கு 40 முதல் 50 ஆயிரமும், ஷெரினுக்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment