close
Choose your channels

போட்டியாளர்களின் சம்பளத்தை பார்த்தோம்.. கமலுக்கும் பிக்பாஸ்-க்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த முழு தகவல்களை ஏற்கனவே பார்த்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ்-க்கும் எவ்வளவு சம்பளம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு மொத்தம் 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட் பிக்பாஸ் குரல் தான் என்பதும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சாஷே என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஆக குரல் கொடுக்கும் சாஷேவுக்கு கடந்த 5 சீசன்களாக மாதம் ரூபாய் 5 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவருக்கு 6 வது சீசனில் ஒரு லட்சம் கூடுதலாக மாதம் 6 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவருக்கும் தெரியும் வகையில் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு 75 கோடியும் பின்னாலிருந்து தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-க்கு வெறும் 6 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது வித்தியாசமான முரண்பாடாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment