எடிட் செய்யாத 'விக்ரம்' படத்தின் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள் என இருந்தாலும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என படம் பார்க்கப் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் இந்த படம் எடிட் செய்வதற்கு முன்னர் எடிட்டர் டேபிளில் வைக்கப்பட்ட போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமாக இருந்தது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் 4 மணி நேரம் படம் எடுத்ததற்காக நாங்கள் வருத்தப்படவில்லை என்றும் அவை அனைத்தும் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவில் உள்ள காட்சிகளாக இருக்கும் என்றும் இந்த காட்சிகள் ஒவ்வொன்றாக அவ்வப்போது வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் அடுத்தடுத்து ‘விக்ரம்’ படத்தின் காட்சிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'மாயோன்' படத்தின் சூப்பர் புரமோஷன்: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமை!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக 'மாயோன்' படத்தின் புரமோஷன் செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷின் பள்ளித்தோழி இவர்தான்: வைரல் வீடியோ

தனுஷின் பள்ளிக்கால தோழி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

24 மணி நேரமும் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி:  தியேட்டருக்கு பொருந்துமா?

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை தற்போது பார்ப்போம்.

ரோலக்ஸ் சாருக்கு கமல்ஹாசன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது

'விக்ரம்' விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருந்தவர் இவரா? 'கட்டிங் பிளேயர்' சொன்ன ஆச்சரிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் மட்டுமின்றி