ஒருகோடி ரூபாய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா தரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதும், ரூ.50 லட்சம் பரிசை தட்டி செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பதையும் தெரிய் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இப்போதுள்ள ஐவரில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் உண்மையான வெற்றியாளர் ஓவியாதான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளில் ஓவியா கலந்து கொள்ளும்போது இது தெரிய வரும்
இந்த நிலையில் ஓவியாவுக்கு பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் குவிந்தாலும், அவர் அனைத்தையும் ஏற்று கொள்ளாமல் தனக்கேற்ற கதை, நிறுவனம் பார்த்தே கால்ஷீட் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஓவியா அந்நிறுவனத்தின் ஓனருடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதாகவும், விளம்பர படத்திற்கும், கடை திறப்பு விழாவுக்கும் சேர்த்து சுமார் ஒரு கோடியை தொட்டுவிடும் அளவிற்கு ஒரு தொகை வாங்கியுள்ளதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது வதந்தி என்றும், ஓவியா தனக்கான நியாயமான சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளதாகவும் ஓவியாவின் தரப்பு கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments