திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் பிரபல நடிகருக்கு 2வது குழந்தை
- IndiaGlitz, [Tuesday,April 24 2018]
பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வெய்ன் ஜான்சன் (Dwayne Johnson) அவர்களை ஹாலிவுட் நடிகர் என்பதை விட WWF ராக் என்று கூறினால்தான் இந்தியாவில் பலருக்கு தெரியும்.
இவர் டேனி கார்சியா என்ற பெண்ணை கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சிமோன் அலெக்ஸ்டாண்ட்ரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியை விவாகரத்து செய்த ட்வெய்ன் ஜான்சன் தற்போது லாரன் ஹாஷியன் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ட்வெய்ன் ஜான்சன் இப்போது பிறந்த குழந்தைக்கு டியானா ஜியா ஜான்சன் என்று பெயரிட்டுள்ளார். மேலும் அந்த குழந்தையை மார்போடு அணைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு வருகின்றனர்,.