சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்குப் பதிலாக களம் இறங்கப் போவது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் 2021 ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு மற்றும் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிய சிஎஸ்கே தற்போது முதல் ஆளாக தகுதிச் சுற்றில் இடம்பிடித்து இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்த முக்கிய ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் சாம் கரன் முதுகுவலி காரணமாக அணியில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக அணியில் வேறொருவரை தேர்வுசெய்து கொள்வதற்கு பிசிசிஐ அனுமதி அளித்திருக்கிறது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயர் டோமினிக் ட்ரேக்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் அணியில் இளம் ஆல்ரவுண்டராக செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடவே பவுலிங்கில் சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேசப் போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளாத டோமினிக் ட்ரேக்ஸ் ஒருமுதல்தரப் போட்டி மற்றும் 25ஏ தரப் போட்டிகள், 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் மிதவேகப் பந்துவீச்சாளராக இருப்பார் என்றும் டி20 போடிகளில் இதுவரை 158 ஸ்டேரேக் ரைட் வைத்துள்ளதால் இவர் சிஎஸ்கே அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout